ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளி – மாநிலங்களவை ஒத்திவைப்பு..!
மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எறிந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து பெகாசஸ், வேளாண் சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி, அமளில் ஈடுபட்டு வருகின்றனர்.இவ்வாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.பின்னர்,மீண்டும் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில்,தற்போது மாநிலங்களவையில் ஆவணங்களை கிழித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும்,பெகாசஸ் விவகாரத்தால் அவைத் தலைவர் இருக்கையையும் முற்றுகையிட்டுள்ளனர்.
குறிப்பாக,அமளியின்போது ஆவணங்களை கிழித்து எறிந்து துணைத் தலைவர் ஹைவன்ஸ் அவர்களை நோக்கி எறிந்ததால்,மாநிலங்களவை பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.