திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய முடிவு.? நாடாளுமன்றத்தில் இன்றைய நிகழ்வு.!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
மத்திய பட்ஜெட்-2023 மீதான விவாதங்கள் குறித்த கூட்டத்தொடர் கடந்த 2 நாட்களாக பாராளுமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், நடைபெற்ற இரண்டு நாளுமே, ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபாட்டால், இரண்டு நாளுமே நாடாளுமன்ற அவைகள் முடங்கியது.
ஆலோசனை :
இந்நிலையில், இன்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சினர் ஒன்றாக இணைந்து ஆலோசனையில் ஈடுபட உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் அதானி குழும விவரகரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற விசாரணை குழு அமைக்க கோரிக்கை வைப்பது எனவும்,
கண்டனம் :
புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்து வருவதை கண்டித்தும் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட உள்ளது எனவும், மேலும், இது தொடர்பாக கண்டன ஊர்வலம் நடத்தவும் எதிர்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.