எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க வேண்டாம்! – பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை
உத்திரபிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சி பிரபலங்களும், மக்களும் தங்களது கண்டன குரலை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பாஜக இளைஞர் அணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில துணைத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து அவர், இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாகவும், எஸ்பி உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், எந்த மாநிலத்திலும், சில தவறுகள் செய்யும்போது மாவட்டத்தின் எஸ்பி மற்றும் 3 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதில்லை என்றும், எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.