ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த முடிவு.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கிட்டத்தட்ட 20 அமர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆரம்ப முதல் தொடர்ச்சியாக பெகசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பி எதிரிக்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மூன்று வாரங்களாக எதிரிக்கட்சிகளின் கடுமையான போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் கூட்டத்தொடர் தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தலைமையில் 14 எதிரிக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது தொடர்பான வியூகம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.
இந்த கூட்டத்தில், திமுக, ஆம்ஆத்மீ, இடசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து நாடாளுமன்ற அருகே இருக்கக்கூடிய ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு எதிராக பெகசஸ் விவகாரத்தில் உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடர வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…