எதிர்க்கட்சிகள் அமளி – மாநிலங்களவை 12 மணிக்கு ஒத்திவைப்பு!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என 4-வது நாளாக எதிர்க்கட்சிகள் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இன்றைய நிகழ்வுகள் தொடங்கிய 3 நிமிடங்களில், மக்களவை மதியம் 2 மணிக்கு நடைபெற இருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
இதனை தொடர்ந்து, தற்போது மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கமிட்டதால், மாநிலங்களவையை பகல் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்துள்ளார்.