எதிர் கட்சிகள் கொரோனா தடுப்பூசி திட்டத்தை சீர்குலைப்பதற்கு சதி செய்வதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் பாஜக எம்பிக்கள் மற்றும் மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவர்கள் பேசினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸுக்கு எதிராக மிக தீவிரமாக போராடி வருவதாகவும், இந்த இக்கட்டான நேரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடி வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கை அமல்படுத்தினால் ஏழைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள் ஊரடங்கு அமல் படுத்தாவிட்டால் கொரோனாவை பரவுவதாக புகார் அளிக்கின்றனர். மேலும், தடுப்பூசி தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை மக்களிடையே பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் தடுப்பூசித் திட்டத்தினை கூட விட்டு வைக்க வில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும் தடுப்பூசி தொடர்பாக எதிர்மறையான தகவல்களை பரப்புவதுடன், கன்றுகுட்டியின் நிணநீர் தடுப்பூசியில் இருப்பதாக வதந்திகளை கிளப்பி மக்களிடையே தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்ப செய்வதாக கூறியுள்ளார். மேலும் மக்களுக்கு சேவையாற்றுவதில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருவதாகவும், ஆனால் எதிர்க்கட்சி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தடுப்பூசி திட்டத்தை சீர்குலைக்க சாதி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…