பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி -பிரதமர் நரேந்திர மோடி
- உத்தர பிரதேச பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
- காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் சைக்கிள் தயாரிப்பு ஆலை கூடவந்ததா என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் ,பயங்கரவாதத்தை ஒழிக்க பாடுபடும் என்னை தீர்த்துக்கட்ட எதிர்க்கட்சிகள் சதி செய்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியின் போது அமேதி தொகுதியில் சைக்கிள் தயாரிப்பு ஆலை கூடவந்ததா? ராணுவத்துக்காக நவீன ரக ஏ.கே.203 துப்பாக்கியை ரஷ்யாவுடன் இணைந்து அமேதியில் தயாரிக்க உள்ளோம்.துப்பாக்கி தயாரிப்பு திட்டம் குறுகிய காலத்தில் நிறைவேற ஒத்துழைத்த ரஷ்ய அதிபர் புதினுக்கு நன்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.