Categories: இந்தியா

மறுவாக்குப்பதிவு நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை..!

Published by
Dinasuvadu desk
பல்வேறு மாநிலங்களில் 4 மக்களவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடந்தது. உத்தரபிரதேச மாநிலம் கைரானா, மராட்டிய மாநிலம் பல்கார், பண்டாரா–கோண்டியா, நாகாலாந்து மாநிலம் நாகாலாந்து ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.பா.ஜனதா எம்.பி. ஹுக்கும் சிங் உயிரிழந்ததால் கைரானா தொகுதியிலும், நாகாலாந்து மாநில முதல்–மந்திரியாக பொறுப்பேற்ற நிபியு ரியோ ராஜினாமா செய்ததால் நாகாலாந்து தொகுதியிலும் இடைத்தேர்தல் நடந்தது.
இதுபோல், உத்தரபிரதேச மாநிலம் நூர்புர், மராட்டிய மாநிலம் பாலஸ் கடேகோன், பஞ்சாப் மாநிலம் ஷாகோட், பீகார் மாநிலம் ஜோகிகட், ஜார்கண்ட் மாநிலம் கோமியா, சில்லி, கேரள மாநிலம் செங்கானூர், மேகாலயா மாநிலம் அம்பாதி, உத்தரகாண்ட் மாநிலம் தாராளி, மேற்கு வங்காள மாநிலம் மகேஷ்தலா ஆகிய 10 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.மேற்கண்ட அனைத்து தொகுதிகளிலும் 31–ந் தேதி (வியாழக்கிழமை) வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இடைத்தேர்தல் நடைபெற்ற பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
கைரானா மற்றும் நுர்பூர் ஆகிய தொகுதிகளில் அதிக இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த இரு தொகுதிகளிலும், மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று  எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்த காங்கிரஸ்  மூத்த தலைவர் ஆர்பிஎன் சிங், சமாஜ்வாடி கட்சித்தலைவர்களில் ஒருவரான ராம்கோபால் யாதவ், ஆர்.எல்.டி கட்சி தலைவர் அஜித் சிங் ஆகியோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, இந்த விவகாரம் குறித்து பேசினர்.
அப்போது, வாக்குப்பதிவு எந்திரங்களின் கோளாறால், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு பாதிக்கப்பட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். இதற்கிடையே, அதிக வெப்பம் காரணமாக வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சீமான் பாஜகவின் B-டீமா.? தமிழிசை கொடுத்த ‘நச்’ பதில்!

சென்னை : தந்தை பெரியார் பற்றி நம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் கடும்…

5 minutes ago

ரூ.7,640 கோடி வரி செலுத்த தயார்! நிர்மலா சீதாராமனுக்கு சுகேஷ் சந்திரசேகர் கடிதம்!

டெல்லி : அரசு வேலை வாங்கி தருவதாக 100க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பண மோசடி, அதிமுவின் இரட்டை இலை சின்னத்தை…

60 minutes ago

தமிழ்நாட்டுக்கே பெருமை!! அஜித் செய்த அந்த நெகிழ்ச்சி செயல்….

சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின் அணி…

2 hours ago

Live: போகிப் பண்டிகை முதல்… கார் ரேஸில் கெத்து காட்டிய அஜித் வரை!

சென்னை: 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அதுவே 'போக்கி' பண்டிகை என்றாகி தற்போது போகி என மருவியுள்ளது. சென்னையில் பல்வேறு…

2 hours ago

2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 116 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

ராஜ்கோட்: மகளிருக்கான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அயர்லாந்தை 116 ரன்கள் வித்தியாசத்தில்இந்திய அணி வீழ்த்தியது. இதன் மூலம் 3 போட்டிகள்…

3 hours ago

வடம் இழுத்த அண்ணாமலை… அறுந்த கயிறு… பாய்ந்து பிடித்த பாதுகாவலர்கள்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தோட்டத்தில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில்…

3 hours ago