கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை எவ்வாறு மாற்றியுள்ளது என்பதைக் காட்டுகிறது என்று அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் பாஜக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி என்று தெரிவித்தார். பிரதமர் தலைமையில் கிராமப்புற மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற டி.டி.சி தேர்தலில் பாஜக வரலாறு உருவாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 11 மாநிலங்களில் இடைத்தேர்தல்கள், 8 உள்ளாட்சி அமைப்புகளின் நடைபெற்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பதிவு செய்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் 242 மாவட்ட பஞ்சாயத்து இடங்களில் 187 மாவட்ட பஞ்சாயத்துகளையும், 6,450 கிராம பஞ்சாயத்து இடங்களிலும் பாஜக வென்றுள்ளது. இதையடுத்து பேசிய அவர், வேளாண் சட்டத்தை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதிலிருந்து எதிர்க்கட்சிகள் ஒரு மாயையை பரப்ப முயற்சித்து வருகின்றன.
மேலும், நாட்டின் கிராமப்புற மக்கள் இந்திய அரசின் முன் தங்கள் வேதனையை வெளிப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்தல் முடிவைகளை வைத்து பார்க்கும்போது விவசாயிகள், கிராமவாசிகள், இல்லத்தரசிகள் மற்றும் பொது மக்கள் கடந்த தேர்தல்களில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான நம்பிக்கையை எவ்வாறு மாற்றியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…