எதிர்க்கட்சிகள் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!
எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு தொடங்கிய நிலையில், இந்த கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்.6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நீட் விலக்கு, ஆன்லைன் ரம்மி தடை உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப தமிழ்நாடு எம்.பி.க்கள் திட்டமிட்டு இருந்தனர்.
ராகுல் காந்திக்கு எதிராக தீர்மானம்
இந்த நிலையில், ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு எதிராக மக்களவையில் தீர்மானம் கொண்டு வந்தார். மேலும், லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து ராகுல்காந்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இரு அவைகளும் ஒத்திவைப்பு
இந்த தீர்மானத்திற்கு எதிராக எதிர்கட்சிகள் முழக்கமிட்டனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.