எதிர்க்கட்சி எம்பிக்கள் நாளை டெல்லியில் பேரணி!
அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாளை பேரணி நடத்த மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு.
அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டு குழுவை அமைக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் நாளை பேரணி நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து டெல்லி விஜய் சதுக்கம் வரை நாளை எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி நடத்த உள்ளனர். இந்த பேரணியை தொடர்ந்து செய்தியாளர்களையும் எதிர்க்கட்சி எம்பிக்கால் சந்திக்க உள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. திமுக, சிவசேனை, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.