நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.ஆனால் மாநிலங்களவையில் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டதால் எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் இதனை செய்யவில்லையென்றால் எதிர்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டத் தொடரை புறக்கணிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் ,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.பி. க்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…