எதிர்க்கட்சிகள் கூட்டம் ஜூலை 14? வெளியான தகவல்..!
எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 14ம் தேதி கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 23-ஆம் தேதி பீகார் மாநிலம் பாட்னாவில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் முதல் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 14ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும், இடம் குறித்த இறுதி முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் ஜெய்ப்பூருக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.