எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக்கேட்பு.? ராகுல்காந்தி கடும் கண்டனம்.!
பயனர்களின் செல்போன் உரையாடல்கள் குறித்து ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை செய்தியானது காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர், பவன் கேரா, ஆம் ஆத்மி எம்பி ராகுல் சத்தா, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அனுப்பபட்டுள்ளது.
உரையாடல்கள் குறித்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அலர்ட் செய்திகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறுகையில், காங்கிரஸ் அலுவலகத்தில் பலருக்கு ஆப்பிள் நிறுவனத்தின் அலர்ட் செய்தி கிடைத்துள்ளது. காங்கிரஸில் கே.சி.வேணுகோபால், சுப்ரியா, பவன் கெரா ஆகியோருக்கும் இந்த செய்தி வந்துள்ளது.
டார்க் வெப்பில் 81.5 கோடி ஆதார் பயனர்களின் தரவுகள் விற்பனை.. வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்த செல்போன் உரையாடல்களை கேட்டு, பாஜகவினர் இளம் தலைமுறையினரின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் இதற்கு பயப்பட மாட்டோம். நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எங்கள் போன் கால்களை கேட்டு கொள்ளலாம். எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. என் போனை ஒட்டு கேட்க வேண்டுமென்றால், நானே தருகிறேன் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கூறினார்.
அரசு ஆதரவுடன் இந்த மாதிரியான செல்போன் விதிமீறல் நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள் என பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அவர்களின் தொலைபேசி நிறுவனத்திடம் இருந்து வந்த எச்சரிக்கை மின்னஞ்சலின் நகலைக் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு காட்டினார். மேலும் அவர் கூறுகையில், இது கிரிமினல்கள் மற்றும் திருடர்களின் வேலை என்று கடுமையாக எச்சரித்தார்.
அடுத்து பாஜக தலைவர்கள் பற்றி கூறுகையில், நான் நம்பர் 1 பிரதமர் மோடி என்றும், நம்பர் 2 அதானி என்றும், நம்பர் 3 அமித் ஷா என்றும் நினைத்தேன், ஆனால் இது தவறு. தற்போது நம்பர் 1 அதானி, நம்பர் 2 பிரதமர் மோடி மற்றும் நம்பர் 3 அமித்ஷா என குற்றம் சாட்டினார். இப்போது இந்திய அரசியலை நாங்கள் புரிந்து கொண்டோம், இப்போது அதானி தப்பிக்க முடியாது. மக்களை திசைதிருப்பும் அரசியல் தான் தற்போது நடக்கிறது என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.