பிரதமரை பேசவிடாமல் எதிர்க்கட்சி தொடர் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!!
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
டெல்லியில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, மறைந்த மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பிறகு மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேருக்கு சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதன்பின், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்து வந்துள்ளார். அப்போது, பிரதமர் மோடியை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளில் ஈடுபட்டு முழக்கம் எழுப்பியுள்ளனர். பட்டியலினத்தவர் மற்றும் பெண்களை அமைச்சர்களாக நியமனம் செய்தது பலருக்கு பிடிக்கவில்லை என்பதால் அமளி ஈடுபடுகிறார்கள் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தன்னை பேசவிடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி செய்ததால் பிரதமர் மோடி கடுமையாக எதிர்ப்பு பின்னரும், தொடர்ந்து எதிர்க்கட்சி அமளி செய்ததால் புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்யும் தகவல்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். இதன்பின், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 12.24 மணிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.