நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் அவைகள் தொடங்குவதற்கு முன்பாக I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் இன்று நாடாளுமன்றத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் I.N.D.I.A எதிர்க்கட்சி கூட்டத்தினர் மணிப்பூரில், அங்குள்ள நிலவரம் தொடர்பாக முகாம்களில் இருப்பவர்களிடம் விசாரிக்க 2 நாள் பயணமாக நேரில் சென்றிருந்தனர். மணிப்பூரில் ஆளுநரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்துகின்றனர்.
ஏற்கனவே நாடாளுமன்ற அவைக்கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்தும் விவாதம் நடத்தப்படுவது தொடர்பாகவும் முக்கியமாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தின் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இதுவரை சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில் எதிர்கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் தொடர்ந்து இரு அவைகளிலும் முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தொடங்கவுள்ள நாடாளுமன்ற அவைக்கூட்டத்தில், நம்பிக்கையில்லா தீர்மானம் உட்பட மணிப்பூர் விவகாரத்தில் விவாதம் நடத்த வலியுறுத்துவது தொடர்பாகவும், இன்று ஆலோசனைக்கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…