சிகப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாக அறிவிக்க வாய்ப்பு .?

Default Image

இந்தியாவில் கொரோனாவால் 8,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அது போல் பலியானோரின் எண்ணிக்கை 250 தாண்டியது.இந்நிலையில் இந்தியாவில் ஊரடங்கு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என  பல மாநில முதலமைச்சர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது குறித்து ஆலோசனை நடத்த நேற்று அனைத்து முதல்வர்களுடன் காணொளி  மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.

 இந்நிலையில் வருகின்ற 30- ம் தேதி வரை பிரதமர் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை  உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உயிர்களைக் காப்பதிலும், வாழ்வாதாரத்தைக் காப்பதிலும் சமமான கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதன்படி அதிகாரிகள்  சில யோசனைகளையும்  கூறியதாக  தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் இந்தியாவை 3 மண்டலங்களாக பிரிக்க வாய்ப்பு, அதாவது சிகப்பு மண்டலம், ஆரஞ்சு மண்டலம், பச்சை மண்டலம்.

சிவப்பு மண்டலம் :  இங்கு எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.அதிக பாதிப்புகள் கொண்ட மாவட்டங்களுக்கு இது அடங்கும்.

ஆரஞ்சு மண்டலம்:  குறைந்தபட்ச நடவடிக்கைகளுக்கு அனுமதி.அதாவது குறைந்த பொதுப் போக்குவரத்தைத் இயக்குதல் , பண்ணைப் பொருட்களை அறுவடை செய்வது போன்ற நடவடிக்கைகள்  இந்த மண்டலங்களில் அனுமதிக்கப்படும்.

பச்சை மண்டலம்: இந்த பச்சை மண்டலத்தில் இங்கு ஊரடங்கு மேலும் தளர்வைக் காணப்படும் என்று ஒரு உயர் அரசு அதிகாரி கூறினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்