டிக் டாக்கில் பிரபலமான சோனாலிக்கு பாஜகவில் போட்டியிட வாய்ப்பு ..!
ஹரியானா மாநிலத்திற்கு வருகின்ற அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் வெளியிட்டு வருகின்றனர். ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அதில் மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் , முன்னாள் ஹாக்கி வீரர் சந்தீப் சிங் , மல்யுத்த வீரர் யோகேஷ்வர் ஆகிய விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.இதை தொடர்ந்து நேற்று இரண்டாவது வேட்பாளார் பட்டியல் வெளியிடப்பட்டது.
— ????????Vivek Chalana???????? (@ChalanaVivek) October 3, 2019
இந்தப்பட்டியலில் டிக் டாக் பிரபலமான சோனாலி போகாட்டுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆதம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஹரியானா மகிளா மோர்ச்சா அமைப்பின் துணைத் தலைவராக சோனாலி உள்ளார். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பயன்படுத்தும் டிக்டாக் செயலியில் இவரது வீடியோ மிகவும் பிரபலமானது.
இவருக்கு பாஜகவில் வாய்ப்பு கிடைத்ததற்கு சமூக வலைதளங்களில் இவர் வெளியிட்டு இருந்த டிக்டாக் வீடீயோவை பலர் தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பலர் வாய்ப்பு கிடைத்ததற்கு விமர்சனம் செய்து வருகின்றனர்.