ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டம்: மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு கொண்டு வந்த இந்திய கடற்படை!
ஆபரேஷன் சமுத்ரா சேது திட்டத்தின் மூலம் இந்திய கடற்படை மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை மீட்டு கொண்டு வந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சிக்கி தவிக்கும் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய குடிமக்களை வெளிநாட்டிலிருந்து திரும்பக் கொண்டுவருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக கடற்படை மே 5 ஆம் தேதி ஆபரேஷன் சமுத்ரா சேதுவைத் தொடங்கியது. இதனையடுத்து, இந்த திட்டத்தின்படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 3,992 குடிமக்களை இந்திய கடற்படை திரும்ப அழைத்து வந்துள்ளது.
55 நாட்களுக்கு மேலாக நீடித்த இந்த நடவடிக்கையில், இந்திய கடற்படைக் கப்பல்களான ஜலாஷ்வா மற்றும் ஐராவத், ஷார்துல் மற்றும் மாகர் ஆகியன பங்கேற்றன.