2 பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
புறநகர் ரயில் சேவைகளில் இன்று முதல் 8 கூடுதல் சிறப்பு ரயில்கள் இயங்குகிறது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் புறநகர் ரயில் சேவைகளில் கூட்டம் அதிகரிப்பதைக் தடுக்கும் வகையில், இன்று முதல் இரண்டு பெண்கள் சிறப்பு ரயில்கள் உட்பட 8 கூடுதல் ரயில் சேவைகளை இயங்குகிறது.
இந்நிலையில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் – கல்யாண் நிலையங்களுக்கு இடையே இரண்டு பெண்கள் சிறப்பு ரயில் உட்பட நான்கு புதிய சிறப்பு ரயில்கள் பிரதான பாதையில் இயங்குகிறது மேலும், மீதமுள்ள நான்கு சிறப்பு ரயில்கள் தானே-வாஷி டிரான்ஸ்-ஹார்பர் பாதையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மும்பையில் 923 புறநகர் சேவைகளை இயக்கி வருகிறது, இதில் மேற்கு ரயில் பாதையில் 500 ரயில்கள் உள்ளது. இன்று முதல் கூடுதல் எட்டு ரயில்களுடன் சேர்த்து மொத்த எண்ணிக்கை 931 ஆக அதிகரித்துள்ளது.