“ஆபரேஷன் கங்கா” – உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு பெயர் சூட்டிய மத்திய அரசு…!

Default Image

உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு “ஆபரேஷன் கங்கா” என மத்திய அரசு சார்பில் பெயர் வைத்துள்ளது.

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே நடந்து வரும் போர் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ரஷ்ய ராணுவம் தொடர்ந்து உக்ரைனுக்குள் நுழைந்து நகரங்களை கைப்பற்றி வருகிறது.  இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும், அங்கு இணையதள சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் முயட்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது.

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட 219 இந்தியர்கள், ஏர் இந்தியா விமானத்தில் ருமேனியாவில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர். இந்த நிலையில், உக்ரைனில் இருந்து இந்தியர்கள் மீட்கப்படும் திட்டத்திற்கு “ஆபரேஷன் கங்கா” என மத்திய அரசு சார்பில் பெயர் வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்