Categories: இந்தியா

ஆபரேஷன் அஜய் : இஸ்ரேலில் இருந்து பத்திரமாக டெல்லி வந்தடைந்த 212 இந்தியர்கள்.!

Published by
மணிகண்டன்

கடந்த 6 நாட்காளாக இஸ்ரேல் – ஹாமாஸ் அமைப்பு தாக்குதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தீவிரமடைந்து வருகிறது. முதலில் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலை இஸ்ரேல் மீது தொடுத்தது. அதன் பிறகு இஸ்ரேல் தங்கள் பதில் தாக்குதலை கடுமையாக நிகழ்த்தி வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக அறியப்படும் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதலை தொடர்ந்து வருகின்றனர்.  வான்வெளி தாக்குதல் மட்டுமின்றி தற்போது தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா பகுதியில் இருந்து பாலஸ்தீன மக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையேயான தொடர் தாக்குதல் காரணமாக விமான சேவைகள் அந்த நாடுகளுக்கு கிட்டத்தட்ட முற்றிலும் நிறுத்தப்பட்டது.  இதனால், படிப்பு, வேலைவாப்பு , புனித யாத்திரை என பல்வேறு காரணங்களுக்காக இஸ்ரேல் சென்று இருந்த இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் உருவானது..

24 மணிநேரத்தில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றாவிட்டால் பட்டினி சாவு ஏற்படும்.! ஐநா எச்சரிக்கை.!

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு “ஆபரேசன் அஜய்” எனும் திட்டத்தை நேற்று முன் தினம் அறிவித்தது, அதன் பெயரில் சிறப்பு விமானம் மூலம் , இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்ப தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்காக இஸ்ரேல் டெல்-அவிவ்வில் இருக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு தங்கள் விவரங்களை அளிக்குமாறு இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, முன்பதிவு செய்து இருந்த 212 இந்தியர்கள் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர். இந்த விமானம், இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது.  இஸ்ரேலில் இருந்து தாயகம் திரும்பியவர்களை வரவேற்க டெல்லி விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உடனிருந்தார்.

மேலும் இந்தியர்களை மீட்க, தேவை ஏற்பட்டால் இந்திய கடற்படை கப்பல்களும் அனுப்பப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்கள் அங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

13 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

13 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

14 hours ago