Categories: இந்தியா

Operation Ajay: 230 இந்தியர்களுடன் முதல் விமானம் நாளை வருகை.!

Published by
கெளதம்

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களில் முதற்கட்டமாக 230 பேருடன் முதல் விமானம் நாளை காலை வருவதாக  வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 6-வது நாளாக இன்றும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 2 ஆயிரதிற்க்கும் மேற்பட்டோர்  கூறப்படுகிறது.

இந்நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்த “ஆபரேஷன் அஜய்” திட்டத்தின் கீழ் இன்று சிறப்பு விமானம் மூலம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்ரேஷன் அஜய்’ மூலம், முதல்கட்டமாக 230 பேரை இந்தியாவுக்கு அழைத்துவருவதற்கான சிறப்பு விமானம் நாளை இந்தியா வருகிறது. தற்போது, இந்த விமானம் இஸ்ரேலில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு புறப்படும் என்றும் அதில் பயணிப்பவர்களிடம் இருந்து கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது, அவர்கள் திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அக்டோபர் 7 ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான சேவையை இஸ்ரேலில் போர் காரணமாக, திடீரென நிறுத்தியதால் இந்தியாவுக்குப் பயணம் செய்ய முடியாமல் போன பயணிகளுக்கு முதலில் இந்த விமான மூலம் திரும்பி வருவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பாலஸ்தீன ஹமாஸுடன் தற்போது போரில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த போரில், இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை, ஒரே ஒரு இந்தியர் மட்டும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனஇந்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார்.

இதற்கிடையில், இஸ்ரேல் பிரதமரை, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போர் நிலவரம் குறித்து பேசினார். அதுமட்டுமில்லாமல், இஸ்ரேலில் இருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago