நாக்பூரில் 5 வயது சிறுமியை லிப்னஸ் என்ற ஐம்பது வயது ஆண் பாலியல் கொடுமை செய்ததாக அந்த சிறுமியின் தாய் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கை கடந்த அக்டோபரில் செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது சிறுமியின் தாய் அளித்த வாக்குமூலம் படி, நான் வேலைக்கு சென்று திரும்பி வரும்போது லிப்னஸ் எனது மகளின் கையை பிடித்திருந்தார். மேலும் அவரின் பேண்ட் ஜிப் திறந்து நிலையில் இருந்தது. இது குறித்து எனது மக்களிடம் கேட்டபோது அந்த நபர் என்னை படுக்கை அறைக்கு உறங்க அழைத்ததாக தெரிவித்தார்.
இதைதொடந்து, நீதிமன்றம் லிப்னசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து. இந்த தீர்ப்பை எதிர்த்து லிப்னஸ் நாக்பூரில் உள்ள மும்பை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார். இருப்பினும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா கடந்த 15-ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார்.
அதில், குற்றம் சாட்டப்பட்டவரின் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை பிடித்து இருப்பதை வைத்தும் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது. லிப்னஸ் வன்கொடுமை செய்ததற்கு போதிய ஆதாரங்கள் இல்லை, எனவே அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைதண்டனை 5 மாதமாக குறைக்கப்படுகிறது என்று நீதிபதி புஷ்பா தெரிவித்தார். இவரின் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு முன் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா வழங்கிய மற்றோரு தீர்ப்பும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுஎன்னவென்றால் ஒரு உடலை மற்றோரு உடலால் தொடுவதுதான் பாலியல் வன்முறை, துணிக்கு மேல் பெண்ணின் உடலை தொடுவது வன்கொடுமை ஆகாது என தீர்ப்பு வழங்கினார். இந்த உத்தரவுக்கு நேற்று முன்தினம் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…