இன்று காஷ்மீரில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறப்பு ?
இன்று காஷ்மீரில் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அம்மாநிலத்திற்கு வழங்கும் சிறப்பு அந்தஸ்து 370-வதை ரத்து செய்வதாகவும் ,காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று அறிவித்தது.இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு அங்கு ஊரடங்கு உத்தரவு பிரிப்பிக்கப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மற்றும் இணைய சேவையானது முற்றிலுமாக முடக்கப்பட்டது .பின்னர் படிப்படியாக சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இன்று முதல் அனைத்து பள்ளிகளும் கல்லூரிகளும் திறக்கப்படுகின்றன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.