ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 185 கிமீ வேகத்திலும் கரையை கடக்கும்
21 ஆண்டுகளுக்கு முன்னர் அந்தமான் கடலில் உருவான சூப்பர் புயல் பல்லாயிரக்காணோர் உயிரை காவு வாங்கி இருந்தது. அந்த சூப்பர் புயல் ஒடிசா கடற்கரையில் சுமார் 200 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. தொடர்ந்து 36 மணிநேரம் இந்த வேகம் குறையாமல் இருந்தது. அதனால், ஒடிசாவில் பல்வேறு மாவட்டங்கள் உருக்குலைந்தன.
இந்த சூப்பர் புயலுக்கு 10,000 பேருக்கு மேலானோர் பலியாகியிருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு அம்மாநில அரசுகள் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து புயல்களை எதிர்கொள்ள தயாராகிவிட்டன.
தற்போது வங்க கடலில் உருவான ஆம்பன் புயல் சூப்பர் புயல் போல வலுப்பெற்று வங்க கடலின் வடகிழக்கு பகுதியில் மே 20 ஆம் தேதி கரையை கடக்க உள்ளது. சராசரியாக 155-165 கிமீ வேகத்திலும், அதிகபட்சமாக 185 கிமீ வேகத்திலும் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலால் ஒடிசா , மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஆம்பன் பாதிப்பு குறித்து உள்துறை அமைச்சகம், பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். மாநில அரசுகளும் இதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றன.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…