BREAKING: கொரோனாவால் உச்சநீதிமன்றத்தில் முக்கிய அமர்வுகள் மட்டுமே செயல்படும்…
கொரோனா வைரஸ் நடவடிக்கையாக உச்சநீதிமன்றத்தில் முக்கியமான வழக்குகளை விசாரிக்கும் அமர்வுகள் மட்டுமே விசாரணை மேற்கொள்ளும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
அதிக கூட்டம் சேரவேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுரையின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டதகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது.
சீனாவிற்கு பிறகு அதிகமாக இத்தாலியில் தான் மிக பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி உள்ளதும். கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் ,கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 5,080 பேர் இறந்துள்ளனர். மேலும் 1,37,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா வைரஸ் இந்தியாவில் 81 பேரை தாக்கி உள்ளது.
கொரோனாவால் இந்தியாவில் கர்நாடகாவை சார்ந்த 76 வயது முதியவர் ஒருவர் இறந்துள்ளார்.இதனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மத்திய ,மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.