மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் – அமித்ஷா
மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் தொலைக்காட்சி மூலம் நாட்டுமக்களுடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பேசியிருந்த நிலையில், இந்தியா தற்சார்பு பெற்ற நாடாக விளங்க வேண்டும் என்றும், உள்நாட்டில் தயாரான பொருட்களையே மக்கள் வாங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை, தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட மத்திய ஆயுதப்படை போலீஸ் கேண்டீன்களில் வரும் ஜூன் 1-ம் தேதி முதல் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்கப்படும் என்றும், மேற்கண்ட படைப்பிரிவுகளில் பணியாற்றும் 10 லட்சம் பேரின் குடும்பங்களில் மொத்தம் 50 லட்சம் பேர் இருக்கின்றனர் என்றும் பதிவிட்டுள்ளார்.