மோடியின் தாடி மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது….! அவருக்கு மூலையில் ஏதோ பிரச்சனை உள்ளது…! – மம்தா பானர்ஜி
நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறுகிறது. நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது மம்தா பானர்ஜி அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து உள்ளார். அவர் பேசுகையில், நாட்டில் தொழில் துறையில் வளர்ச்சி நின்றுவிட்டது. பிரதமரின் தாடி மட்டுமே வளர்ந்து வருகிறது. சில நேரங்களில் அவர் தன்னைத்தானே சுவாமி விவேகானந்தா என்று கூறிக்கொள்கிறார். சில நேரங்களில் தனது பெயரை அரங்குகளுக்கு மறுபெயரிடுகிறார். அவரது மூளையில் ஏதோ பிரச்சினை உள்ளது என்று விமர்சித்துள்ளார்.