ஜனவரி முதல் அமல்.! ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு மத்திய அரசின் புதிய திட்டம்.!

Default Image
  • ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவது ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு.
  • முதல் கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரேஷன் கார்டு திட்டத்தை வரும் 2020-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவது பொருந்தும் வகையிலான பொதுவான வடிவமைப்பில் ரேஷன் கார்டுகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதனை மாநில அரசுகள் அதே வடிவமைப்பு முறையைப் பின்பற்றி புதிய ரேசன் கார்டுகளை மக்களுக்கு வழங்க வலியுறுத்தியுள்ளது.

முதல் கட்டமாக 12 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த உள்ள நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் , மகாராஷ்ட்ரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படும். ரேஷன் கார்டு வைத்திருக்கும்  பயனாளிகள் அனைவரும் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் (என்எஃப்எஸ்ஏ) கீழ் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு நியாய விலைக் கடைகளிலிருந்தும் தங்களது ரேஷன் காா்டைப் பயன்படுத்தி பொருள்களை பெறமுடியும்.

பின்னர் ஒவ்வொருவரின் ஆதார் கார்டில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை நியாயவிலை கடைகளில் உள்ள பி.ஓ.எஸ் கருவிகளுடன் இணைத்த பின்னர் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தபடும் என கூறப்படுகிறது. இவர்கள் எந்த மாநிலத்திலும் எந்த ரேசன் கடையிலும் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம், வேலை, தொழில் சம்மதமாக அடிக்கடி இடம் மாறும் கூலித் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் இதற்காக முகவரியை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்