இந்தியாவில் 42.6% பெண்கள் மட்டுமே இதுவரை இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்..!

Default Image

2019 ஆம் ஆண்டில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் மற்றும் பெண்களின் சதவீதம் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சராசரியாக 42.6% பெண்கள் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதுவே ஆண்களில் சராசரியாக 62.16% ஆக உள்ளது.

மேலும், கிராமப்புறங்களில் 10 பெண்களில் 3-க்கும் குறைவானவர்களும், நகர்ப்புறங்களில் 10 பெண்களில் 4 பேரும் இணையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய 50 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் உள்ள மாநிலங்களில் கோவா (78.1%), இமாச்சலப் பிரதேசம் (78.9%), கேரளா (64.9%), மகாராஷ்டிரா (54.3%), மணிப்பூர் உள்ளது.

நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய மிகக் குறைந்த சதவீத பெண்களைப் பதிவுசெய்த ஐந்து மாநிலங்கள் ஆந்திரா (33.9%), பீகார் (38.4%), திரிபுரா (36.6%), தெலுங்கானா (43.9%) மற்றும் குஜராத் (48.9%).

கிராமப்புறங்களில் இதுவரை மிகக் குறைந்த சதவீதத்தை இணையத்தைப் பயன்படுத்திய பெண்கள் கொண்ட ஐந்து மாநிலங்கள்: மேற்கு வங்கம் (14%), ஆந்திரா (15.4%), தெலுங்கானா (15.8%), திரிபுரா (17.7%) மற்றும் பீகார் (17 %).

நகர்ப்புறங்களில் இணையத்தைப் பயன்படுத்திய ஆண்கள் உள்ள மாநிலங்களில் பீகார் (58.4%), மேகாலயா (59.2%), மேற்கு வங்கம் (64.6%), ஆந்திரா (65.1%) மற்றும் அசாம் (67.4%) உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்