40,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!சபரிமலை தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு.!

Default Image

சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்கதர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

கார்த்திகை மாதம் 1ஆம் தேதி (நவம்பர் 17) சபரிமலை ஐயப்பன் சன்னிதானம் திறக்கப்பட்டது. அன்றிலிருந்து பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலை தரிசனத்திற்கு தயாராகி வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறந்து 41வது நாள் மண்டல பூஜை நடைபெறும். வெகு விமர்சியாக நடைபெறும் இந்த மண்டல பூஜையை காண பக்தர்கள் லட்சக்கணக்கானோர் வருவார்கள்.

இதில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அதிக பக்தர்கள் வராமல் இருந்து வந்த நிலையில் இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவதால், மண்டல பூஜையன்று பக்கதர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்