ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை துவங்கப்பட்ட முதல் நாளே 19,000 பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்!
ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதிலும் போக்குவரத்து முற்றிலுமாக கடந்த சில மாதங்கள் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் அரசு விதித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் தற்போது போக்குவரத்து அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் மெட்ரோ சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் 2.5 முதல் 3 லட்சம் பயணிகள் வரை வரக்கூடிய இந்இந்த மெட்ரோ ரயில் சேவையில் தற்போது வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
சுமார் 120 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு இருந்தாலும் மிகக்குறைவான பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயிலில் தூய்மைப்படுத்த கூடிய நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் சுகாதாரமான பயணம் ஆகியவற்றால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும், பெரும்பாலும் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொண்டதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.