ஆன்லைன் வாக்களிக்கும் முறை -வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பரிந்துரை!

Default Image

வெளி நாட்டில் வாழக்கூடிய இந்தியர்களுக்காக ஆன்லைனில் வாக்களிக்கும் முறையைக் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணையம் சட்டத்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுக்கான பிரச்சாரங்களை தற்பொழுது முதலே துவங்கிவிட்டனர் என்றுதான் கூறியாக வேண்டும். பலரும் தங்களுக்கான வாக்குகளை சேகரிப்பதற்காக மக்களிடம் தாங்கள் செய்யக் கூடிய நன்மைகளையும் செய்த நன்மைகளையும் அடிக்கடி எடுத்துக் கூறிக் கொண்டே இருக்கின்றனர். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெளிநாடுகளில் வசித்து வரக்கூடிய இந்தியர்கள் தற்பொழுது கொரானா காலகட்டத்தால், இந்தியாவிற்கும் வரமுடியாது. வெளிநாடுகளிலிருந்து வாக்களிக்கவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வெளிநாடுகளில் வாழக்கூடிய இந்தியர்கள் அங்கு இருந்தபடியே ஆன்லைன் மூலமாக வாக்களிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. முன்பதாகவே, மார்க்சிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் கேட்டிருந்த கேள்விக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், வெளி நாட்டில் வாழக்கூடிய இந்தியர்கள் ஆன்லைனில் வாக்களிக்கும் முறையை கொண்டு வருவதற்கு சட்டத் துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக சீதாராம் எச்சூரி அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்