இன்று அமலுக்கு வருகிறது ஆன்லைன் ரயில் டிக்கெட் விலை உயர்வு
இன்று முதல் ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படுகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளுக்கு தலா ரூ.20 முதல் ரூ.40 வரை சேவை கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.இதன் பின்னர் பழைய ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதைதொடர்ந்து, இணையவழி பண பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த சேவை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இன்று முதல் மீண்டும் சேவைக்கட்டணம் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது . ஏசி இல்லாத வகுப்புகளுக்கு ரூ.15+ஜிஎஸ்டி, ஏசி வகுப்புகளுக்கு ரூ.30+ஜிஎஸ்டி சேவைக்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.