டெல்லி : குடியரசு தினவிழா அணிவகுப்பு டிக்கெட்களை ஆன்லைனில் பெறுவது எப்படி.?
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு, ராணுவ ஒத்திகைகளை நேரில் சென்று காண வேண்டுமா? உடனே கீழ் கண்டவாறு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.
நாளை மறுநாள் இந்தியா முழுவதும் 73வது குடியரசு தின விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் ராணுவ அணிவகுப்பு, ராணுவ வீரர்களின் ஒத்திகை உள்ளிட்ட நிகழ்வு நடைபெறும். இதனை காண இந்தியா முழுவதும் பலர் டெல்லிக்கு வருவது வழக்கம்.
அப்படி வரும் பார்வையாளர்கள் வசதிக்காக ஆன்லைனில் டிக்கெட்களை முன்பதிவு மத்திய அரசு ஓர் இணையதள வசதியை பயன்படுத்த கோரியுள்ளது. அதன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
www.aamantran.mod.gov.in என்ற இணையதளத்தில் முதலில் உள்ளே செல்ல வேண்டும். அதில் ஏற்கனவே பெயர், முகவரி கொடுத்து கணக்கை உருவாக்கி வைத்திருந்தால், நேரடியாக மொபைல் நம்பர் கொடுத்து உள்ளே செல்லலாம்.
இல்லையெனில், முதலில் புதிய கணக்கை உருவாக்க வேண்டும். அதில், நமது பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, மொபைல் நம்பர் கொடுத்து கணக்கை உருவாக்கி கொள்ள வேண்டும். அதன்பிறகு login செய்ய வேண்டும்.
அதில் நேரடியாக டிக்கெட் முன்பதிவு தளத்திற்கு சென்றுவிடும். அதில் 4 விதமான தேர்வு இருக்கும். அதில், குடியரசு தின விழா அணிவகுப்பு காண வேண்டுமா.? ராணுவ ஒத்திகை காண வேண்டுமா.? ராணுவ ஒத்திகை பயிற்சியை காண வேண்டுமா.? உள்ளிட்ட 4 தேர்வு இருக்கும்.
இதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன் மூலம் ஒத்திகை, பயிற்சி, அணிவகுப்பு நடைபெறும் நாளை பொறுத்து அதன் தேர்வுகள் வெளிவரும். அதில் டிக்கெட் விலை 20 முதல் 500 வரையில் இருக்கும் அதில் பார்வையாளர் பெயர், முகவரி, பிறந்த தேதி, அடையாள அட்டை விவரம் உள்ளிட்டவைகளை உள்ளீடு செய்து டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.