ஆன்லைன் ஷாப்பிங் : ஆர்டர் செய்தது பாஸ்போர்ட் கவர்; வந்தது ஒரிஜினல் பாஸ்போர்ட்!

Default Image

அமேசானில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்த கேரளாவை சேர்ந்த நபருக்கு ஒரிஜினலாக பாஸ்போர் அனுப்பப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள வயநாடு மாவட்டம் கனியம்பேட்டா எனும் கிராமத்தை சேர்ந்த மிதுன் பாபு என்பவர் தனது பாஸ்போர்ட்டை வைப்பதற்காக ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசானில் பாஸ்போட் கவர் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு அமேசான் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1 ஆம் தேதியும் மிதுனுக்கு பார்சல் வந்துள்ளது. அதில் அவர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் தான் இருக்கும் என்று நினைத்துள்ளார்.

ஆனால் அதை பிரித்து பார்த்த போது பாஸ்போர்ட்டுக்கு பதிலாக உண்மையான ஒருவரது ஒரிஜினல் பாஸ்போர்ட் இருந்துள்ளது. இந்திய அரசால் விநியோகிக்கப்பட கூடிய பாஸ்போர்ட் எப்படி அமேசான் நிறுவனத்தின் மூலமாக வந்துள்ளது என்பது தெரியாமல் குழப்பம் அடைந்த மிதுன், அமேசான் வாடிக்கையாளர் சேவைப் பிரிவுக்கு அழைத்துள்ளார். அங்கும் அவருக்கு சரியான பதில் அளிக்கப்படாததால் அவர் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்து திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடைய பாஸ்போர்ட் என்பதை கண்டறிந்துள்ளார்.

இது குறித்து அவரிடமும் கூறி உள்ளார். அப்பொழுது தான் தெரிய வந்துள்ளது அந்த பாஸ்போர்ட்டின் உரிமையாளர் முகமது சலீம் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கியுள்ளார். அப்பொழுது அதில் தனது பாஸ்போர்ட்டை வைத்து பார்த்துள்ளார். ஆனால் பாஸ்போட் கவர் பிடிக்காததால் மீண்டும் அதை திருப்பி அனுப்பியுள்ளார்.

திருப்பி அனுப்பும் பொழுது அவர் வைத்திருந்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்துள்ளார். இந்நிலையில் அவர் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவர் தான் மிதுனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் தான் மிதுனிடம் பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்