ஆன்லைன் ரம்மி சட்டவிரோதமானது – கேரள அரசு அதிரடி அறிவிப்பு!
ஆன்லைனில் ரம்மி விளையாடுவது சட்டவிரோதமானது என கேரள மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அண்மை காலங்களாகவே ஆன்லைன் விளையாட்டுகள் எவ்வளவு அதிகரித்துள்ளதோ அதேபோல ஆன்லைன் மோசடியும் அதிகரித்துவிட்டது. சில மோசடி கும்பலிடம் சிக்கி தவிக்க கூடிய அப்பாவி மக்கள் தங்களது பணத்தை இழந்து அதன்பின் கடன் தொல்லையால் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீப காலங்களாகவே அதிக அளவில் ஆன்லைன் ரம்மி விளையாடி அதில் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை கோரி பல்வேறு மாநிலங்களிலும் மனு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவிலும் மனு அளிக்கப்பட்டு வந்தது. இந்த மனு மீதான விசாரணையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவிட்டதை அடுத்து, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசாங்கம் உறுதியளித்தது. இதனையடுத்து தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது எனும் அறிவிப்பை கேரளா அரசாங்கம் வெளியிட்டுள்ளது.