டெல்லி முதல்வர் மகளிடமே கைவரிசை காட்டிய ஆன்லைன் கொள்ளையர்கள்!

Default Image

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மக்களிடம் OLX செயலி மூலம் ஆன்லைன் கும்பல் 34,000 மோசடி செய்துள்ளது.

தற்பொழுதைய நவீன காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதையும், விற்பனை செய்வதையும் வீட்டிலிருந்த படியே சில செயலிகள் மூலமாக சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது. இந்நிலையில், பலருக்கு இருந்த இடத்திலேயே வேலை முடிவதால் இது சாதகமானதாக தெரிந்தாலும், சிலருக்கு கொள்ளையடிப்பதற்கு இது தான் சாதகமானதாக மாறி விடுகிறது. ஆன்லைன் மூலமாக பொருள் வாங்கும் பலர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்க நேரிடுகிறது. இந்நிலையில், சாதாரணமாக உள்ள மக்களிடம் கைவரிசை காட்டி வந்த கும்பல் தற்பொழுது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடமும் தனது கைவரிசையை காட்டியுள்ளது.

முதல்வர் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா OLX எனும் செயலி மூலமாக தன்னுடைய வீட்டிலுள்ள பழைய ஷோபாவை விற்பனை செய்யப்போவதாக விளம்பரம் செய்துள்ளார். இதனை பார்த்து முதலில் சிறிதளவு பணத்தை அனுப்பிவிட்டு தனது QR கோர்ட்டை அனுப்பிய ஆன்லைன் கொள்ளையன் ஸ்கேன் செய்து மீதி பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளான். ஹர்ஷிதாவும் அதை போல செய்ய அவரது வாங்கி கணக்கிலிருந்து 34,000 ருபாய் திருடப்பட்டுள்ளது. தரப்பிழுது டெல்லி காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனராம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்