ஐதராபாத்தில் இணையவழி மோசடி..! பணத்தை இழந்த போலீஸ்.!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்து உள்ளது.இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் இணையவழி மோசடி அதிகரித்து வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுவரை இணையவழி மோசடி தொடர்பாக 160 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் அதிகமாக மது மற்றும் வாகனங்கள் விற்பனை என்று அதிக அளவில் மோசடி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனை என்று விளம்பரத்தை பார்த்து சுல்தான் பஜார் பகுதியை சார்ந்த ஒரு நபரின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.92,000 ஏமாற்றி உள்ளனர்.மேலும் காவலரும் , தனியார் ஊழியரும் இரு சக்கர வாகன விற்பனை விளம்பரத்தால் ரூ.32,000 வரை ஏமாந்துள்ளனர்.
இணையத்தில் வெளியாகும் விளம்பரத்தில் மத்திய பாதுகாப்பு படைவீரர் , இராணுவ வீரர் என்றும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.