Categories: இந்தியா

ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம்..!

Published by
லீனா

குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறையை அறிமுகம்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தற்போது குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், ஆதார் அட்டையில் முகவரியை மாற்றி அமைப்பதற்கு தங்கள் பெயரில் போதுமான ஆவணங்கள் இல்லாத குடியிருப்போரின் உறவினருக்கு (குழந்தைகள், கணவன்/ மனைவி, பெற்றோர்) இந்த புதிய முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

விண்ணப்பதாரருக்கும் குடும்பத் தலைவருக்கும் இடையேயான உறவை குறிப்பிட்டு அவர்களது பெயர்கள், ரேஷன் அட்டை, மதிப்பெண் சான்றிதழ், திருமண சான்றிதழ், கடவுச்சிட்டு போன்ற ஆவணங்களை ஆதாரமாக சமரப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்ட உறவுமுறைக்கான ஆதார ஆவணம் இல்லாதபட்சத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கியுள்ள குறிப்பிட்ட வடிவத்தில் குடும்ப தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சுயசான்றிதழை பயன்படுத்தலாம்.

தற்போது நிலுவையில் உள்ள இருப்பிடம் சான்று ஆவண வசதியுடன் இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட எந்த ஒரு நபரும் குடும்ப தலைவராகக் கருதப்படுவதோடு, தமது முகவரியை உறவினர்களுடன் இதற்காக பகிர்ந் கொள்ளலாம்.

இணைய வழியாக முகவரியை மாற்றும் வேளையில் https ://uidai.gov.in என்ற தளத்தில் இந்த தேர்வை ஒருவர் பயன்படுத்தலாம். அதன்பிறகு. குடும்பத் தலைவரின் ஆதார் எண்ணை சரிபார்த்தல் நடைமுறைக்காக பதிவு செய்ய வேண்டும். பின்பு, உறவுமுறை ஆவண சான்றை குடியிருப்போர் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த சேவையை பயன்படுத்துவதற்கு கட்டணமாக ரூ.50  செலுத்தப்பட வேண்டும். கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு குடும்பத் தலைவருக்கு, இது குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். அறிவிக்கை கிடைத்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் குடும்பத் தலைவர் தமது ஒப்புதலை தெரிவிக்க வேண்டும்.

குறிப்பிட்ட 10 நாட்களுக்குள் இந்த கோரிக்கையை குடும்பத் தலைவர் நிராகரித்தாலோ, அல்லது தமது முகவரியை பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்ட விண்ணப்பம் நிறுத்தப்படும். இது சம்பந்தமான தகவல், விண்ணப்பித்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும். இது போன்ற குழ்நிலையில் விண்ணப்பதாரர் செலுத்திய கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… சீறிப்பாயும் காளைகளுடன் மல்லுக்கட்டும் வீரர்கள்.!

மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…

21 minutes ago

முடிவுக்கு வரும் போர்: இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்..!

இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…

56 minutes ago

பிரபல ரவுடி பாம் சரவணன் துப்பாக்கி முனையில் கைது.!

சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…

2 hours ago

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

17 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

18 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

21 hours ago