கர்நாடகாவில் செப்-1 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்..கல்லூரி திறப்பு குறித்து துணை முதல்வர் விளக்கம்.!
கர்நாடகாவில் செப்-1 முதல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்குகிறது.
இந்நிலையில் கர்நாடகாவில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என்றும் வழக்கமான வகுப்புகள் அக்டோபரில் தொடங்கும் என கர்நாடக துணை முதல்வர் அஸ்வத்நாராயணன் நேற்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், வழக்கமான வகுப்புகள் மத்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி தொடங்கும். பல்கலைக்கழக மானிய ஆணையம் அல்லது யுஜிசி வழிகாட்டுதல்களின்படி வகுப்புகளைத் தொடங்க மாநில அரசு விரிவான அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கபடுகிறது என தெரிவித்தார்.
இதற்கிடையில், செப்டம்பர் மாதத்தில் கல்லூரி தேர்வுகளை நடத்த வேண்டியிருக்கும் என்பதால் தற்போது ஆன்லைன் வகுப்பை நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.