இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் – உத்தரகண்ட்!
இன்று முதல் உத்தரகாண்டில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளிகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் உள்ளதால் மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல மாநிலங்களில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நிறுத்தப்பட்டு, இணைய வகுப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இணைய வகுப்புகளுக்கும் உத்தரகாண்டில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்தது.
எனவே, மீண்டும் இணைய வழி வகுப்புகள் தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் உத்தரகண்டில் இணைய வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் என மாநில பள்ளி கல்வித்துறை இணை செயலாளர் ஜே.எல்.சர்மா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் வரையில் தொடர்ந்து இணைய வழி வகுப்புகள் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.