1 முதல் 5-ம் வகுப்பு வரை கர்நாடகாவில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை!
கர்நாடகாவில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடை.
கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளிகளும், மூடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் 2020-2021-ம் ஆண்டுக்கான பாடத்திட்டங்களை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவிலும் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகிற நிலையில், சிறுவர்கள் எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அதிக நேரம் அமர்ந்திருப்பது, அவர்களுக்கு உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படும் என குற்றசாட்டுகள் எழுந்தது.
இதனையடுத்து பெங்களூரில் உள்ள மனநல மற்றும் நரம்பியல் இன்ஸ்டிடியூட் மருத்துவ குழுவினர் இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டார். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், 6 வயது வரையிலான சிறுவர்கள் தொடர்ந்து எலக்ட்ரானிக் பொருட்கள் முன்பாக அமர்ந்திருப்பது அவர்களது மனநலத்தை பாதிக்கும் என ஆய்வறிக்கையை சமர்ப்பித்தனர்.
இந்த அறிக்கையை தொடர்ந்து அமைச்சர் சுரேஷ்குமார் அளித்த பேட்டியில், 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தக் கூடாது என தெரிவித்துள்ளார்.