கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள்- உத்தரகண்ட் அரசு உத்தரவு

Default Image

வருகின்ற 21-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் இணையவழி வகுப்புகளை நடத்தவேண்டும் என்று உத்தரகண்ட் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்விநிலையங்களை மூட உத்தரவு பிறப்பித்தது.
இதனால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க உத்தரகண்ட் அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.அதாவது ,
வருகின்ற 21-ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள், மாநில அளவிலான பல்கலைக்கழகங்கள், அவற்றின் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகள் இணையவழியாக வகுப்புகளை நடத்த வேண்டும்.இந்த வகுப்புகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும் .மேலும் மாணவர்களுக்கு பேராசியர்கள் வகுப்புகள் தொடா்பான கால அட்டவணை குறித்து தகவல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்