கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். அதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரங்கள் திருடப்பட்டு விடுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பற்றிய பயம் பொதுமக்களிடையே பரவலாக காணப்படுகிறது. இதனை பயன்படுத்தி கொண்டு ஒரு மோசடி கும்பல் இணையம் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி திருடி விடுகிறது. இதனை பொருட்டு சிபிஐ ஓர் எச்சரிக்கை செய்தியை வங்கிநிர்வாகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தெரிவித்துள்ளது.
சிபிஐ எச்சரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அதாவது தற்போது ஊரடங்கின் காரணமாக ஏராளாமான பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமே நடக்கிறது. அதனை இந்த மோசடி கும்பல் பயன்படுத்திக்கொள்கிறது.
அதாவது, கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். வாடிக்கையாளருக்கு தெரியாத்தனமாக அந்த லிங்கை க்ளிக் செய்தால் அதன் மூலம், செர்பரஸ் ட்ரோஜன் ( Cerberus Trojan ) என்கிற ஆன்லைன் வைரஸ் செல்போனிற்குள் புகுந்துவிடும்.
அதன் மூலம், குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு வங்கி வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரம், டெபிட் கார்டு விபரம் போன்ற முக்கிய விபரங்கள் தெரிந்துவிடுகிறது. இதன் மூலம் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து எளிதில் பணம் திருடப்படுகிறது.
ஆதலால், கொரோனா தொடர்பான எந்தவித முறையற்ற லிங்கை க்ளிக் செய்தும் பயனர்கள் ஏமாற வேண்டாம் எனவும், இந்த மோசடி சர்வதேச அளவில் நடைபெறுவதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது. அதனை தொடர்ந்து, சிபிஐயானது வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பி வாடிக்கையாளர்களை உஷார்படுத்த கோரியுள்ளது.
சென்னை -திருக்கார்த்திகை ஸ்பெஷல் அப்பம் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; வெல்லம் =முக்கால்…
சென்னை : சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், வெளியாகி 15 நாட்களைக் கடந்து…
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…