உஷார்.! கொரோனாவை பயன்படுத்தி வங்கி கணக்குகளில் கொள்ளை.! இன்டர்போல் எச்சரிக்கை.!

Default Image

கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். அதன் மூலம், வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரங்கள் திருடப்பட்டு விடுகிறது. 

தற்போது கொரோனா வைரஸ் பற்றிய பயம் பொதுமக்களிடையே பரவலாக காணப்படுகிறது.  இதனை பயன்படுத்தி கொண்டு ஒரு மோசடி கும்பல் இணையம் வாயிலாக வங்கி கணக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி திருடி விடுகிறது. இதனை பொருட்டு சிபிஐ ஓர் எச்சரிக்கை செய்தியை வங்கிநிர்வாகங்களுக்கும், மாநில அரசுகளுக்கும் தெரிவித்துள்ளது. 

சிபிஐ எச்சரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, அதாவது தற்போது ஊரடங்கின் காரணமாக ஏராளாமான பண பரிவர்த்தனைகள் ஆன்லைன் மூலமே நடக்கிறது. அதனை இந்த மோசடி கும்பல் பயன்படுத்திக்கொள்கிறது. 

அதாவது, கொரோனா தொடர்பான விபரங்களை பெற இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள் என குறுந்தகவல் வங்கி வாடிக்கையாளருக்கு சென்று விடும். வாடிக்கையாளருக்கு தெரியாத்தனமாக அந்த லிங்கை க்ளிக் செய்தால் அதன் மூலம், செர்பரஸ் ட்ரோஜன் ( Cerberus Trojan ) என்கிற ஆன்லைன் வைரஸ் செல்போனிற்குள் புகுந்துவிடும். 

அதன் மூலம், குறுஞ்செய்தி அனுப்பியவருக்கு வங்கி வாடிக்கையாளரின் வங்கி கணக்கு விபரம், டெபிட் கார்டு விபரம் போன்ற முக்கிய விபரங்கள் தெரிந்துவிடுகிறது. இதன் மூலம் ஒருவரது வங்கி கணக்கில் இருந்து எளிதில் பணம் திருடப்படுகிறது. 

ஆதலால், கொரோனா தொடர்பான எந்தவித முறையற்ற லிங்கை க்ளிக் செய்தும் பயனர்கள் ஏமாற வேண்டாம் எனவும், இந்த மோசடி சர்வதேச அளவில் நடைபெறுவதாக சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் எச்சரித்துள்ளது. அதனை தொடர்ந்து, சிபிஐயானது வங்கிகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இந்த எச்சரிக்கை தகவலை அனுப்பி வாடிக்கையாளர்களை உஷார்படுத்த கோரியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்