#முக்கிய அறிவிப்பு – JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு மீண்டும் துவக்கம்!
வரும் ஜூன் 20 – 29 வரை நடைபெறவுள்ள தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25ம் தேதி வரை என அறிவிப்பு.
JEE Main தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவங்கியுள்ளது என்று தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூன் 20 முதல் 29 வரை நடைபெற உள்ள JEE Main (session-1) தேர்வுக்கு, இன்று முதல் வரும் 25-ம் தேதி வரை https://jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. தேர்வு தேதி தள்ளிவைக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் துவக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை ஏப்ரல் 25, 2022 (இரவு 9 மணி) வரை சமர்ப்பிக்கலாம்.