அடப்பாவிகளா!!ஒருதலைக்காதல்..கடத்தி ஓடும் காரில் பெண்ணுக்கு தாலி கட்டி..பேஸ்புக்கில் வீடியோ பதிவிட்டு துணிகர கொடுமை..!

Published by
kavitha
  • காரில் கடத்தி சென்று பெண்ணிற்கு கட்டாயதாலிக்கட்டிய இளைஞர்,மருத்துவமனையில் பெண்ணின் தந்தை அனுமதி
  • கட்டாய தாலிக்கட்டிய வீடியாவை பேஸ்புக்கில் பகிர்ந்து இளைஞர்கள் துணீகரம் என்று ஒரு தலைக்காதல் கொடுமை

கர்நாடகா மாநிலத்தில் இருக்கிறது ஹசான் மாவட்டம் இந்த மாவட்டத்தில் உள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் மனுகுமார் என்ற இளைஞர். இவர் தனது உறவுக்கார பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலையாக காதலித்து உள்ளார். தன் காதலை பலமுறை அப் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அவரது வீட்டிலும் தெரியப்படுத்தி உள்ளார். ஆனால் அப்பெண் மணுவின் காதலை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. அப்பெண்ணின் வீட்டாருக்கும் அந்த இளைஞர்க்கு  மகளை கட்டிக் கொடுப்பதில் சம்மதமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் அதே பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு வேலைக்கு சென்ற பெண் இரவு நெடுநேரம் ஆகிய பின்னரும் வீடுதிரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள்பல இடங்களில் தேடியுள்ளனர்.ஆனால் எங்கு தேடியும் கிடைக்காததால், துத்தா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர் அதில் மனுகுமார் என்ற இளைஞர் தனது நண்பர்களின் உதவியோடு  இளம் பெண்ணை காரில் கடத்தி  சென்றதும் காரில் வைத்தே அப்பெண்ணிற்கு கட்டாயத் தாலிகட்டியதும் தெரியவந்துள்ளது.

தாலிக்கட்டிய அப்பெண்ணோடு அந்த இளைஞர்  ராமாநகாராவில் உள்ள உறவினர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.தகவல் அறிந்து  உடனே ராமாநகாரா பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அந்த பெண்ணை மீட்டனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  மனுகுமார் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் மனுகுமார் அளித்த வாக்குமுலமானது: டெய்லர் கடைக்கு பணிக்கு தினமும் சென்ற அப்பெண்ணை நோட்டமிட்டு வந்தாகவும் கடத்தலன்று நாங்கள் பேருந்து நிலையத்தில் காருடன் காத்திருந்தோம் அப்போது பேருந்தில் ஏறுவதற்காக நின்ற பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி, காரில் வைத்தே திருமணம் செய்ததாக கூறினார். மேலும் தாலிக்கட்டும் போது பெண்ணின் அழுகை குரல் வெளியே கேட்காமல் இருக்க பாட்டை சத்தமாக ஒலிக்க செய்தோம் என்று தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் கட்டாய தாலிகட்டிய திருமண வீடியோ காட்சியை என்னுடைய பேஸ்புக்கில் வெளிட்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் பேஷ்புக்கில் மணு வெளியிட்ட வீடியோவானது சமூகவலையதலத்தில் அதிகவேகமாக பரவியது.ஏற்கனவே பெண் காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வரும் காவல்துறையின் பார்வையில் இந்த வீடியோ பட்டது.உடனே இது தொடர்பாக களமிரங்கிய காவல்துறையினர் மனுகுமாரையும், அவரது நண்பர்கள் 2 பேரையும் கைது செய்னர் மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரத்தை அறிந்த அப்பெண்ணின் தந்தை தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

4 hours ago
தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

4 hours ago
எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

5 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

5 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

6 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 hours ago