Categories: இந்தியா

OneNationOneElection: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’! தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 2014-ல் முதல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற நடைமுறையை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக கருத்து கேட்பும் கேட்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், எதிர்க்கட்சிகளின்  எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அந்தவகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை சாத்தியமா என்பது குறித்து ஆராய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், இக்குழுவின் உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டது. அதில், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் காஷ்யப் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த சிறப்பு குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து முடிவெடுக்கும். அதுமட்டுமில்லாமல், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான மசோதாவும் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர INDIA கூட்டணி முடிவு செய்துள்ளது.

செப்.18ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் INDIA கூட்டணி நாளை ஆலோசனை மேற்கொள்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப்.18ம் தேதி முதல் 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சஞ்சு சாம்சன் வேண்டாம்” சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே!

மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…

45 minutes ago

கர்நாடகா ஸ்பெஷல் போண்டா சூப் செய்வது எப்படி.? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

சென்னை :கர்நாடகா ஸ்பெஷல் போண்டா  சூப் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; உளுந்து…

55 minutes ago

மன்னராட்சி மன நிலைக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள் – அண்ணாமலை காட்டம்!

சென்னை : பொங்கல் பண்டிகையொட்டி பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு…

2 hours ago

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்! 8வது ஊதிய கமிஷனுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம், அலவன்ஸ், ஓய்வூதியம் உள்ளிட்ட மற்ற சலுகைகள் தொடர்பான முடிவுகள் பற்றி ஆய்வு…

2 hours ago

‘இந்தியன் 3 வேலை ஆரம்பிக்கப்போறோம்’…இயக்குநர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

சென்னை : நம்ம பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கு என்னதான் ஆச்சு? என்கிற வகையில், தொடர்ச்சியாக அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைந்து…

2 hours ago

மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!

சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…

3 hours ago